பெங்களூரு குழந்தைகள் கொண்டாடிய அப்பாக்கள் தினம்

இந்திய சட்டங்கள்தான் அப்பாக்களை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. விவாகரத்து வழக்குகளில் தவறான தாயிடம் குழந்தைகள் கிக்கி சீரழிந்தாலும் பரவாயில்லை தந்தையிடம் குழந்தையைக் கொடுக்கக்கூடாது என்று பிடிவாதமாக சட்ட நடைமுறைகள் இருந்துவருகின்றன.

ஆணுக்குள்ளும் தாய்மை உண்டு என்பதை உணர்த்துவதற்காகத்தான் தாயும் ஆனவன் என்ற உருவத்தில் கடவுளே திருச்சிராப்பள்ளியில் எழுந்தருளியிருக்கிறான். ஆனால் சட்டம் மற்றும் சமூகக் கண்ணோட்டத்தில் மட்டும் தந்தை என்பவன் ஒரு உயிருள்ள, உணர்ச்சியுள்ள, பாசமுள்ள உயிரியாகவே கருதப்படுவதில்லை.

இதுபோன்ற தவறான கண்ணோட்டத்தால் இந்தியாவில் பல குழந்தைகள் குறிப்பாக பொய் வரதட்சணை வழக்குகளுக்கிடையே சிக்கியிருக்கும் பல குழந்தைகள் தந்தை என்ற ஒரு பந்தமே இல்லாமல் வளர்ந்து வருகிறார்கள்.

இதுபோன்ற காலகட்டத்தில் பெங்களூரில் வாழும் குழந்தைகள் தந்தையர் தினத்தை பாசமுடன் கொண்டாடி மகிழ்ந்திருக்கிறார்கள்.