இந்தியக் குழந்தைகள் ஏன் கஷ்டப்படுகிறார்கள் தெரியுமா?

இந்தியாவில் குழந்தைகள் நல அமைச்சகம் என்று ஒன்று இருக்கிறது என்று இப்போதாவது தெரிந்துகொள்ளுங்கள். அதனால்தான் இந்தியக் குழந்தைகள் இப்படி கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

ஊழலற்ற நாட்டில் மட்டுமே எந்தப்பணியும் நேர்மையாக நடக்கும். அதுவரை எத்தனை அமைச்சகம் வைத்தாலும் சரி, மக்களின் வரிப்பணத்தை “பட்ஜெட்” என்ற பெயரில் ஆண்டுதோறும் ஒதுக்கீடு செய்துகொண்டாலும் சரி. அப்பாவி பொதுமக்கள் துன்புற்றிருக்கவேண்டியதுதான்.



தினமலர் செய்திப்படம் 29.7.201

குழந்தையின் அழுகுரல் கேட்காமலிருக்க ஒரு வழி

இந்தியாவில் குழந்தைகளின் நலனை கவனிப்பதற்கென்றே தனியாக ஒரு மத்திய அமைச்சகம் அதற்கு ஒரு அமைச்சர், வருடந்தோறும் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு இதெல்லாம் நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் இந்தியக் குழந்தைகளுக்கு நாட்டில் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்று பாருங்கள்.

மேலை நாடுகளில் இதற்குப் பெயர் மனித உரிமை மீறல் என்று பெயர். இந்தியாவில் மனித உயிரா? அப்படி என்றால் என்ன? என்று கேட்கும் நிலையில் இந்தக் குழந்தைகளுக்காக யார் கவலைப்படப் போகிறார்கள்?


இப்படியா செய்வது...!பள்ளிக்கு பாடம் படிக்க வந்த மாணவ, மாணவிகளை புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியினர் வேனில் ஏற்றி வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுத்தினர். விபரம் தெரியாத மாணவ, மாணவிகள் ஓ வென கதறி அழுதனர். (தினமலர் 27/7/2011)

அமைச்சரகம் இந்திய மருமகள்களின் உரிமையை பாதுகாக்கும் முக்கியப் பணியில் மூழ்கி இருப்பதால் குழந்தைகள் நலனைப் பற்றி கவனிக்க நேரமிருக்காது. மருமகள்களின் உரிமையைப் பாதுகாக்க பல சட்டங்களை இயற்றும் பணியில் மட்டுமே மூழ்கிவிட்டால் மற்ற வேலைகள் மறந்துவிடும் போலிருக்கிறது.

பெங்களூரு குழந்தைகள் கொண்டாடிய அப்பாக்கள் தினம்

இந்திய சட்டங்கள்தான் அப்பாக்களை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. விவாகரத்து வழக்குகளில் தவறான தாயிடம் குழந்தைகள் கிக்கி சீரழிந்தாலும் பரவாயில்லை தந்தையிடம் குழந்தையைக் கொடுக்கக்கூடாது என்று பிடிவாதமாக சட்ட நடைமுறைகள் இருந்துவருகின்றன.

ஆணுக்குள்ளும் தாய்மை உண்டு என்பதை உணர்த்துவதற்காகத்தான் தாயும் ஆனவன் என்ற உருவத்தில் கடவுளே திருச்சிராப்பள்ளியில் எழுந்தருளியிருக்கிறான். ஆனால் சட்டம் மற்றும் சமூகக் கண்ணோட்டத்தில் மட்டும் தந்தை என்பவன் ஒரு உயிருள்ள, உணர்ச்சியுள்ள, பாசமுள்ள உயிரியாகவே கருதப்படுவதில்லை.

இதுபோன்ற தவறான கண்ணோட்டத்தால் இந்தியாவில் பல குழந்தைகள் குறிப்பாக பொய் வரதட்சணை வழக்குகளுக்கிடையே சிக்கியிருக்கும் பல குழந்தைகள் தந்தை என்ற ஒரு பந்தமே இல்லாமல் வளர்ந்து வருகிறார்கள்.

இதுபோன்ற காலகட்டத்தில் பெங்களூரில் வாழும் குழந்தைகள் தந்தையர் தினத்தை பாசமுடன் கொண்டாடி மகிழ்ந்திருக்கிறார்கள்.


அன்னையர் தினத்தில் ஒரு மானக்கேடு

அன்னையர் தினத்தில் தமிழ்நாட்டில் குழந்தைகள் நிலை இப்படியா? மிகவும் வேதனை.

ஒரே வாரத்தில் 2 குழந்தை வீச்சு இது மணப்பாறை நகர அவலம்
மே 07,2011 தினமலர்

மணப்பாறை: மணப்பாறை அருகே பிறந்து சில மணி நேரமேயான ஆண் குழந்தையை ரோட்டோரம் வீசிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒரே வாரத்தில் இது இரண்டாவது சம்பவம் ஆகும். மணப்பாறை, வெள்ளக்கல்லில் உள்ள அனிதா காஸ் சிலிண்டர் குடோன் அருகே நேற்று காலை 7.30 மணியளவில் ரோட்டோரம் துணி சுற்றப்பட்ட நிலையில் பிறந்து சில மணிநேரமே ஆன ஆண் குழந்தை கிடந்தது. அவ்வழியாகச் சென்றவர்கள் குழந்தையின் அழுகுரல் கேட்டு அருகே சென்று பார்த்தபோது குழந்தை அங்கு போடப்பட்டிருப்பது தெரியவந்தது. மணப்பாறை போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் இளஞ்செழியன் சம்பவ இடம் சென்று குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் குழந்தை சேர்க்கப்பட்டுள்ளது

கடந்த நான்கு நாட்களுக்கு முன் இதே பகுதியில் காய்கறி மார்க்கெட் அருகில் இதேபோல பெண் குழந்தை கிடந்தது. சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அக்குழந்தை சில மணிநேரத்தில் இறந்தது குறிப்பிடத்தக்கது.

தவறான உறவால் பிறந்த குழந்தைகள் என்பதால் வீசப்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? எனவும் குழந்தையின் பெற்றோர் யார்? எனவும் போலீஸார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். ஒரே வாரத்தில் இரண்டு குழந்தைகள் அனாதையாக வீசப்பட்ட சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.