சென்னை நகரில் குழந்தைகளின் அவல நிலை

இந்தியாவில் தலைசிறந்த மாநிலமாகக் கருதப்படும் தமிழகத்தின் தலைநகரில் உள்ள பள்ளிக் குழந்தைகளுக்கே இந்த அவலநிலையென்றால் கிராமங்களில் இருக்கும் குழந்தைகளில் நிலை எப்படி இருக்கும்?

இந்தப் படத்தை பாக்கும் தருணத்தில் இந்தியாவில் குழந்தைகள் நல்வாழ்வு அமைச்சகம் என்று ஒரு மத்திய அமைச்சரகம் இருக்கிறது என்பது கட்டாயம் அனைவருக்கும் நினைவிற்கு வரும். ஊழல் ஒழியாதவரை எத்தனை அரசாங்கம் வந்தாலும் குழந்தைகளின் இன்னல்கள் அதிகரித்துக்கொண்டேதான் இருக்கும்.

(தினமலர் செய்திப்படம் 18/8/2011)

ஆண்களும், குழந்தைகளும் ஒன்றுதான்

இந்தியாவைப் பொறுத்தவரை ஆண்களும் குழந்தைகளும் ஒரே நிலையில்தான் இருக்கிறார்கள். ஆண்களுக்கு சட்டப்பாதுகாப்பு இல்லை! இந்தியக் குழந்தைகளுக்கு எந்தப் பாதுகாப்பும் இல்லை!!


'இவர்களுக்கு எப்போது சுதந்திரம்: தேனி மாவட்டம், வைகை அணை ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளியில் மாணவ, மாணவிகளை சுதந்திர தினத்தை முன்னிட்டு பள்ளியை சுத்தம் செய்ய ஆசிரியர்கள் உத்தரவிட்டனர். (தினமலர் செய்திப்படங்கள் 13.8.2011)

தேனி மாவட்டம், வைகை அணை ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளியில் மாணவ, மாணவிகளை சுதந்திர தினத்தை முன்னிட்டு பள்ளியை சுத்தம் செய்ய ஆசிரியர்கள் உத்தரவிட்டதையடுத்து குடத்தில் தண்ணீர் கொண்டு வரும் மாணவிகள்.


எந்தவித கேள்வி முறையுமின்றி இந்திய ஆண்கள் மீது எந்தப் பெண் வேண்டுமானாலும் கற்பழிப்பு, பாலியல் பலாத்காரம், வரதட்சணைக் கொடுமை என பல பொய் குற்ற வழக்குகளைப் பதிவு செய்யலாம். அதே போல குழந்தைகளை யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் கொடுமை செய்யலாம். இந்த இரண்டு அநீதியையும் கேட்பதற்கு ஆளில்லை.

மேலை நாடுகளில் இருப்பது போல பெண்களுக்கு உரிமை வழங்கும் “Women Empowerment” திட்டத்தை அவசர அவசரமாக இறக்குமதி செய்து பல சட்டங்களை இயற்றும் அரசாங்கம் குழந்தைகள் நலனுக்காக ஒரு அமைச்சரையே வைத்திருந்தாலும் இந்தியக் குழந்தைகளின் நலனில் ஏதாவது முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறதா?

மேலை நாடுகளில் இதுபோல பள்ளிக் குழந்தைகள் நடத்தப்பட்டால் அது கொடிய மனித உரிமை மீறும் குற்றமாக கருதப்படும். ஆனால் இந்தியாவில்?

இந்தியக் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து தேவையா?

இந்தியக் குழந்தைகளுக்கு ஊட்டச் சத்துக் கொடுக்கிறார்களோ இல்லையோ கண்டிப்பாக வியாதியைக் கொடுத்துவிடுவார்கள் போலிருக்கிறது. என்ன செய்வது இந்தியாவில் பிறந்ததற்காக பெருமைப்படுகிறோம் என்று சொல்லிக்கொண்டு நோயாளியாக வாழ்வைக் கழிக்க பழகிக்கொள்ளவேண்டும். எல்லாம் ஊழல்.

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் எதிரே குழந்தைகள் ஊட்டசத்து மையம் முன், கால்வாய் நிரம்பி கழிவுநீர் தேங்கியுள்ளது. (தினமலர் செய்திப்படம் 5.8.2011)

இந்தியக் குழந்தைகளுக்கு மட்டுமே நடக்கும் அதிசயம்

இதுபோன்ற அதிசயமான சம்பவங்கள் இந்தியாவில் இருக்கும் குழந்தைகளுக்கு மட்டுமே சிறப்பாக நடந்துகொண்டிருக்கிறது. பல ஆண்டுகளாக இந்த அவலம் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. பெற்றவர்களுக்கும் அக்கறையில்லை. குழந்தைகள் நலனுக்காக தனியாக அமைச்சகம் நடத்திக்கொண்டிருக்கும் அரசாங்கத்திற்கும் அக்கறையில்லை.

இலவச பஸ் பாஸ் என்பதால் "கலெக்ஷன்' வராது என பல அரசு பஸ் டிரைவர்களும், கண்டக்டர்களும் ஸ்டாப்பில் பஸ்சை நிறுத்துவது இல்லை. இதனால் கையில் புத்தகப்பை சுமையுடன் உயிரை வெறுத்து ஓடி பஸ்சை பிடிக்க நேரிடுகிறது. இதில் மாணவர்கள் அடித்து பிடித்து ஏறுவதால் கீழே விழுந்து காயம் ஏற்படுகிறது. (தினமலர் செய்திப்படம் 2/8/11)



ஈரோடு பெரியவலசு நடுநிலைப்பள்ளி மாணவியர் களப்பயணமாக அரசு அருங்காட்சியகத்துக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்கள் பூங்கா ரோட்டில் உட்கார வைத்திருந்த அவல நிலை. (தினமலர் செய்திப்படம் 2/8/11)