அன்னையர் தினத்தில் ஒரு மானக்கேடு

அன்னையர் தினத்தில் தமிழ்நாட்டில் குழந்தைகள் நிலை இப்படியா? மிகவும் வேதனை.

ஒரே வாரத்தில் 2 குழந்தை வீச்சு இது மணப்பாறை நகர அவலம்
மே 07,2011 தினமலர்

மணப்பாறை: மணப்பாறை அருகே பிறந்து சில மணி நேரமேயான ஆண் குழந்தையை ரோட்டோரம் வீசிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒரே வாரத்தில் இது இரண்டாவது சம்பவம் ஆகும். மணப்பாறை, வெள்ளக்கல்லில் உள்ள அனிதா காஸ் சிலிண்டர் குடோன் அருகே நேற்று காலை 7.30 மணியளவில் ரோட்டோரம் துணி சுற்றப்பட்ட நிலையில் பிறந்து சில மணிநேரமே ஆன ஆண் குழந்தை கிடந்தது. அவ்வழியாகச் சென்றவர்கள் குழந்தையின் அழுகுரல் கேட்டு அருகே சென்று பார்த்தபோது குழந்தை அங்கு போடப்பட்டிருப்பது தெரியவந்தது. மணப்பாறை போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் இளஞ்செழியன் சம்பவ இடம் சென்று குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் குழந்தை சேர்க்கப்பட்டுள்ளது

கடந்த நான்கு நாட்களுக்கு முன் இதே பகுதியில் காய்கறி மார்க்கெட் அருகில் இதேபோல பெண் குழந்தை கிடந்தது. சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அக்குழந்தை சில மணிநேரத்தில் இறந்தது குறிப்பிடத்தக்கது.

தவறான உறவால் பிறந்த குழந்தைகள் என்பதால் வீசப்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? எனவும் குழந்தையின் பெற்றோர் யார்? எனவும் போலீஸார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். ஒரே வாரத்தில் இரண்டு குழந்தைகள் அனாதையாக வீசப்பட்ட சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் குழந்தையாக பிறப்பது பாவமா?



நாகப்பட்டினம் : கள்ளக்காதலனுடன் சேர்ந்து வாழ, தடையாக இருந்த இரண்டு குழந்தைகளை கொலை செய்து, ஆற்றில் வீசிய தாய்க்கு, இரட்டை ஆயுள் தண்டனை விதித்து, நாகை கோர்ட் உத்தரவிட்டது. காரைக்கால், [...]


அற்ப மனிதர்களின் கள்ளக்காமத்திற்கு அப்பாவிக் குழந்தைகள்தான் பலியாகிறார்கள். இந்தியாவில் கள்ளக்காமத்திற்காக இதுபோன்று குழந்தைகள் கொல்லப்படுதல், துன்புறுத்துதல் போன்ற செயல்கள் சர்வசாதாரணமாக நடக்கிறது. இதுபோன்ற அப்பாவிக் குழந்தைகளைக் காப்பாற்ற எந்த ஒரு சட்டமும் இல்லை. குழந்தையை ஒருவனிடம் பெற்றுவிட்டு வேறு ஒருவனுடன் கள்ளக்காமத்தில் ஈடுபடும் பெண்ணை தண்டிப்பதற்கு இந்திய சட்டத்தில் இடமே கிடையாது. அதனால்தான் இதுபோல பல கள்ளக்காம வழக்குகள் நாளுக்கு நாள் அதிகமாக உருவாகின்றன. சட்டத்தின் துணையோடு மனித மிருகங்கள் நடத்தும் காமக் களியாட்டத்தில் கடைசியில் பலியாவது அப்பாவிக் குழந்தைகள்தான்.

இதுபோலத்தான் சமீபத்தில் ஒரு வரதட்சணை வழக்கில் குற்றவாளியை கைதுசெய்கிறேன் என்ற பெயரில் ஒர கர்ப்பிணியை கைதுசெய்து துன்புறுத்தி அவர் வயிற்றில் இருந்த சிசுவை பிறப்பதற்கு முன்பே அழித்துவிட்டார்கள். அந்த சிசுவிற்கு நீதி வழங்கப்போவது யார்? (கர்ப்பிணியின் கருவறுத்த காவல்துறை - இந்திய வரதட்சணை வழக்குகளின் உச்சகட்டம்)

இந்தியாவில் பிறக்கும் அப்பாவிக் குழந்தைகளை கடவுள்தான் காப்பாற்றவேண்டும்.

இந்தியாவில் தினசரி நடக்கும் குழந்தை கண்காட்சி

இதுபோன்ற செய்திகளை நீங்கள் தினம் தினம் செய்தித்தாள்களில் படித்துக்கொண்டிருக்கிறீர்கள். எந்த நாட்டிலும் நடக்காத ஒரு கண்காட்சி இந்தியாவில் தினம் தினம் நடந்துகொண்டிருக்கிறது. இதற்காக ஒவ்வொரு இந்தியனும் பெருமைப்படவேண்டும்.



செங்குன்றம் அடுத்துள்ள தீர்த்தகரையம்பட்டு அங்கம்மன் கோவில் தெருவில் உள்ள தனியார் பள்ளி அருகே அனாதையாக கிடந்த பெண் குழந்தை. (தினமலர் செய்திப் படம் (10.2.2011)


தினமலர் நவம்பர் 2,2010
நாமக்கல் மாவட்டம், ப.வேலூர் ராஜவாய்க்கால் அருகே வீசி சென்ற பிறந்த சில மணி நேரமான பெண் சிசுவை, அருகில் இருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் ஒப்படைத்தனர்.

பையில் பிறந்த குழந்தை!

மாலை மலர் வெள்ளிக்கிழமை, ஜனவரி 14,2011

திங்கட்கிழமை, ஜனவரி 10,2011 மாலை மலர்


கள்ளத்தொடர்பால் அனாதையான பெண் : திரிசங்கு நிலையில் மகன்

தினமலர் நவம்பர் 06,2010

குழந்தைகளை தவிக்கவிட்டு மருமகனுடன் அத்தை ஓட்டம்
புதன்கிழமை, அக்டோபர் 27, 2010 Thats Tamil

கள்ளத்தொடர்பில் பிறந்த சிசுவைக் கொலை செய்த தாய்

அக்டோபர் 25,2010 தினமலர்

அக்டோபர் 09,2010 தினமலர்
கள்ளத்தொடர்புக்கு இடையூறாக இருந்த குழந்தையை கொலை செய்த தாய்க்கு ஆயுள்
தினமலர் அக்டோபர் 02,2010
"உல்லாசத்திற்கு' இடையூறாக இருந்த குழந்தை கொலை நாடகமாடிய தாய்
தினமலர் செப்டம்பர் 16,2010
காதலுக்கு இடையூறாக இருந்த 6 வயது மகளுக்கு சூடு வைத்து சித்திரவதை செய்த ஆசிரியை
செப்டம்பர் 16, 2010 ThatsTamil
ஜூலை 29,2010 தினமலர்
கள்ளக்காதலுடன் ஓடிய தாயை பார்த்ததும் அழுத குழந்தைகள்
அக்டோபர் 29,2009 தினமலர்

இந்தியக் குழந்தைகளைக் காக்க தெனாலிராமன் இப்போது வருவாரா?

புகழ்மிக்க தெனாலிராமன் கதைகளில் சொல்லப்படும் ஒரு சிறுகதை

ஒரு நாள் இரண்டு பெண்மணிகள் அரசவையில் வந்து வித்தியாசமான வழக்கை அரசன் முன் வைத்தார்கள். தனது குழந்தையை மற்றொரு பெண் அவளது குழந்தை என்று சொந்தம் கொண்டாடுகிறாள் என்று ஒரு பெண்மணி மற்றொரு பெண் மீது குற்றம் சாட்டினார். இதே குற்றச்சாட்டை மற்றொரு பெண்ணும் முன்வைத்தார்.

உண்மையான தாய் யார் என்று கண்டுபிடிக்க முடியவில்லை. குழந்தையோ மிகவும் சிறுவயதுக் குழந்தை. அதன் தாயை அதனால் அடையாளம் காட்ட முடியாது. இப்போது போல அந்தக்காலத்தில் மரபணு சோதனை (DNA Test) போன்ற அறிவியல் முன்னேற்றமும் கிடையாது. இந்த வழக்கில் எப்படி தீர்ப்பு சொல்வது என்று அரசனுக்கு குழப்பம் வந்தது.

உடனே அரசன் தெனாலிராமனை அழைத்து இந்த வழக்கை முடித்துவைக்க உதவுமாறு கேட்டுக்கொண்டார். தெனாலிராமன் அந்த இரண்டு பெண்களையும் மறுநாள் விசாரணைக்கு வருமாறு கூறினார். மறுநாள் இருவரும் வந்தவுடன் மன்னரும் ஆவலுடன் தெனாலிராமனின் தீர்ப்பை கேட்கக் காத்திருந்தார்.

தெனாலிராமன் குழந்தையை இரண்டு சமபாகமாக துண்டுகளாக வெட்டி தாய் என்று கூறிக்கொள்ளும் இந்த இரண்டு பெண்களுக்கும் சமமாக பகிர்ந்து கொடுக்குமாறு காவலாளிக்கு உத்தரவிட்டார். இதுதான் தனது தீர்ப்பு என்று கூறினார். இதைக்கேட்ட மன்னர் அதிர்ச்சியடைந்துவிட்டார். இது என்ன கொடூரமான தீர்ப்பாக இருக்கிறதே என்று கோபமடைந்தார்.

குழந்தையை வெட்ட காவலாளி தயாரானபோது அந்த இரண்டு பெண்களில் ஒரு பெண் ஓடிவந்து தனக்கு அந்தக் குழந்தை கிடைக்கவில்லையென்றாலும் பராவாயில்லை எனது குழந்தை உயிரோடு இருக்கவேண்டும் என்று தெனாலிராமனிடம் கேட்டுக்கொண்டாள்.

உடனே தெனாலிராமன் அந்தப் பெண்மணியிடமே அந்தக் குழந்தையை ஒப்படைத்தார். பிறகு மன்னனுக்கு தனது தீர்ப்பை விளக்கமாகக் கூறினார். உண்மையான தாய்க்கு தன் குழந்தையின் நலனில் மிகுந்த அக்கறையிருக்கும். தன் குழந்தைக்காக எதையும் தியாகம் செய்பவள்தான் உண்மையான தாய். அதை இந்தப் பெண் நிரூபித்துவிட்டாள். அதனால் இவள்தான் உண்மையான தாய் என்று கூறி வழக்கை முடித்தார்.

இந்தக் கதையைப் படித்தபிறகு பின்வரும் வீடியோவைப் பாருங்கள். தெனாலிராமன் சாதுர்யமாகத் தீர்ப்பு வழங்கி பேசத் தெரியாத பச்சிளம் குழந்தைக்குக்கூட நீதிவழங்கிய நாட்டில் இப்போது Child Custody, Child Maintenance, Divorce, பொய் வரதட்சணை வழக்குகள் என்ற பெயர்களில் நீதிமன்றங்களும், காவல்துறையும், பொறுப்பற்ற பெற்றோர்களும் பல அப்பாவிக் குழந்தைகளை எப்படி துன்புறுத்துகிறார்கள் என்று தெரியும்.

சிறுவயதில் பள்ளிக்கூடத்தில் சொல்லிக்கொடுக்கப்பட்ட இந்த சரியானநீதி வழங்கும் முறை இப்போது சட்டக்கல்லூரிகளில் பல ஆண்டுகள் சட்டங்களை கரைத்துக் கு(ப)டித்தாலும் தெரியுமா என்பது மிகவும் சந்தேகமே.

இந்தியாவில் பிறக்கும் அப்பாவிக் குழந்தைகளை இக்காலத்து இந்தியச் சட்டங்களால் காப்பாற்ற முடியாது. இறைவன்தான் காப்பாற்றவேண்டும்.





குழந்தைகளைப் பந்தாடும் பொறுப்பற்ற பெற்றோர்கள்

பெண் குழந்தை கடத்தல் : தாயிடம் இருந்து மீட்பு

ஆகஸ்ட் 28,2010 தினமலர்

சென்னை : சென்னையில் கடத்தப்பட்ட பெண் குழந்தை, சிவகங்கையில் அதன் தாயாரிடம் இருந்து மீட்கப்பட்டது.

சென்னை, சாலிகிராமம் பகுதியைச் சேர்ந்தவர் பிரபாகரன். கைப்பந்து சங்க நிர்வாகி. இவரது மகள் ஜனனி (8). இவர்களுடன், பிரபாகரனின் தம்பி கதிரேசன், அவரது மனைவி உமாமகேஸ்வரி, மகள் மோனிஷா (8) ஆகியோரும் கூட்டுக் குடும்பமாக வசித்து வருகின்றனர். நேற்று முன்தினம் உமாமகேஸ்வரி, ஜனனி மற்றும் தனது மகள் மோனிஷாவை அழைத்துக் கொண்டு கே.கே.நகருக்கு சென்றார்.அங்கு கடையில் பொருட்கள் வாங்கிவிட்டு, திரும்பும் போது ஒரு கார் அவர்களை உரசியபடி வந்து நின்றது. அந்த காரில் இருந்து இறங்கிய மூவர் ஜனனியை காரில் ஏற்றிக் கொள்ள கார் பறந்தது. இதனால், அதிர்ச்சியடைந்த உமா மகேஸ்வரி, பிரபாகரனை தொடர்பு கொண்டு நடந்தவற்றை கூறினார். பிரபாகரன் இதுகுறித்து, கே.கே.நகர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் செல்வமணி, தனிப்படை அமைத்து விசாரணையை துவக்கினார்.அப்போது, பிரபாகரனின் மனைவி ஜெயலட்சுமி கருத்துவேறுபாடால் பிரிந்து சிவகங்கையில் தந்தை வீட்டில் வாழ்வது தெரிந்தது. அவர்களை தொடர்பு கொண்ட போது ஜனனி தாயிடம் இருப்பது தெரியவந்தது. ஜெயலட்சுமி, தனது மகளை பார்க்க முடியாமல் தவித்ததாகவும், மகளுடன் வந்தவர்களிடம் சொல்லிவிட்டுதான் அழைத்து வந்ததாக போலீசாரிடம் கூறியுள்ளார்.தொடர்ந்து, தனிப்படை போலீசார் சிவகங்கை சென்று ஜனனியை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். பெற்ற தாய்க்கும், தந்தைக்கும் உள்ள பிரச்னையில் இருதலைக் கொள்ளி எறும்பாக குழந்தை தவித்து வருகிறது.

சிறுவர்களை சீரழிக்கும் சுயநல அரசியல்

தினமலரில் வெளிவந்த படமும் கருத்தும். ஜூலை 5, 2010

படித்தவர்கள் அரசியலுக்கு வரட்டும், வேண்டாம் என கூறவில்லை, அதற்காக புத்தகம் பிடிக்கும் வயதில், கட்சி கொடியை கொடுத்து, அமைச்சர் சிதம்பரம் வருகைக்காக மாணவர்களை வெயிலில் காக்க வைப்பது, எவ்விதத்தில் நியாயம்.இடம்: காரைக்குடி,பெத்தாட்சி குடியிருப்பு.
============

என்றுதான் இந்தியாவில் அரசியல்வாதிகள் சகமனிதர்களை உயிருள்ள மனிதர்களாக மதிப்பார்களோ?

குழந்தைகளைப் பந்தாடும் கயவர்கள்

தங்களது சுயநலத்திற்காக சட்டத்தைப் பயன்படுத்தி என்போன்ற அப்பாவிக் குழந்தைகளை வைத்து பந்தாடும் கயவர்களும், தங்களின் வருமானத்திற்காக குடும்பங்களை அழிப்பதற்கென்றே பல சட்டங்களை இயற்றிக்கொண்டிருக்கும் கயவர்களும் இருக்கின்ற நாட்டில் பிறந்தது என்போன்ற குழந்தைகளின் குற்றமா?
தினமலர் 21 மே 2010


சென்னை : பிறந்த நாளை முன்னிட்டு, கோவிலுக்கு அழைத்துச் செல்ல இரண்டு குழந்தைகளையும் தந்தையிடம் ஒப்படைக்க வேண்டும் என, மனைவிக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மனைவி அனிதா. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். கணவன், மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்கின்றனர். குழந்தைகள் இருவரையும் தன்னிடம் ஒப்படைக்கக் கோரி, சென்னை ஐகோர்ட்டில் கிருஷ்ணன் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு நிலுவையில் இருக்கும் போது, தனது குழந்தைகளை இடைக்காலமாக ஒப்படைக்கக் கோரி, மனு தாக்கல் செய்தார். இம்மனு நீதிபதி அரிபரந்தாமன் முன் விசாரணைக்கு வந்தது. கிருஷ்ணன் சார்பில் ஆஜரான வக்கீல், "மூத்த மகனுக்கு 22ம் தேதி (இன்று) பிறந்த நாள் வருகிறது. எனவே, குழந்தைகளை பார்க்க கிருஷ்ணனை அனுமதிக்க வேண்டும்' என்றார்.

இதையடுத்து, நீதிபதி அரிபரந்தாமன் பிறப்பித்த உத்தரவில், "இரண்டு குழந்தைகளையும் கோவிலுக்கு அழைத்துச் செல்ல கிருஷ்ணனுக்கு அனுமதியளிக்கப்படுகிறது. காலை 10 மணி முதல் 12 மணி வரை அனுமதியளிக்கப்படுகிறது. காலை 10 மணிக்கு இரண்டு குழந்தைகளையும் கிருஷ்ணனிடம் அனிதா ஒப்படைக்க வேண்டும். 12 மணிக்கு குழந்தைகளை தாயாரிடம் மனுதாரர் ஒப்படைக்க வேண்டும்' என, கூறியுள்ளார்.

மற்றொரு செய்தி: மகளை ஒப்படைக்கக் கோரி தந்தை மனு பதிலளிக்க தாயாருக்கு ஐகோர்ட் நோட்டீஸ்