இந்தியாவில் இனி இதுபோல நடக்குமா?


கல்விக்கு உகந்த விஜயதசமி நாளில் மழலைகளுக்கு வித்யாரம்பம் எனும் எழுத்தறிவிக்கும் பணியில் மழலைகளுடன் பெற்றோர்கள் உற்சாக பங்கேற்றனர்.இடம்: சரஸ்வதிகோயில், திருநெல்வேலி. (தினமலர் செய்திப் படம் 7/10/2011)
=====

இந்திய அரசாங்கத்தால் இயற்றப்பட்டுள்ள பல மருமகள் பாதுகாப்பு சட்டங்களால் (IPC498A, Domestic Violence Act) பல குடும்பங்கள் சிதைந்துள்ளன. இன்றும் பல குடும்பங்கள் சிதைந்து கொண்டிருக்கின்றன. இதுபோன்ற சூழ்நிலையில் பல குழந்தைகளுக்கு மேலை நாடுகளில் இருப்பது போல ஒற்றை பெற்றோர் மட்டுமே இருக்கிறார்கள். இது போன்று உருவாகிக்கொண்டிருக்கும் பல குடும்பங்களில் எதிர்காலத்தில் குழந்தைகளுக்கு தாய், தந்தை என்ற முழுமையான பெற்றோர்கள் இல்லாத எதிர்காலம்தான் காத்திருக்கிறது.

அன்னையும், பிதாவும் முன்னறி தெய்வம் என்று உலகிற்கு பறைசாற்றிய இந்திய நாட்டில் இப்போது குழந்தைகளின் நிலை என்னவாகும் என்று கடவுளுக்கு மட்டுமே தெரியும்!

குழந்தைகளிடம் திணிக்கப்படும் முரண்பாடுகள்

பள்ளியில் சேரும்போதே சாதியின் பெயரைக் கேட்கிறார்கள். பிறகு வாழ்க்கையின் ஒவ்வொரு படியிலும் சாதியின் அடிப்படையில்தான் எல்லாமே நடக்கிறது.

இதற்கு நடுவே சமூக நல்லிணக்கம் என்ற பெயரில் ஊர்வலம் போகச் சொல்கிறார்கள். என்ன ஒரு முரண்பாடு! முதலில் அனைத்து இடங்களிலும் சாதியின் பெயரால் பிரித்தாளும் கொள்கையை கைவிட்டால்தானே சமூகத்தில் நல்லிணக்கம் ஏற்படும்.

சமூக நல்லிணக்க இருவாரவிழாவையொட்டி மதுரையில் சுற்றுலாத்துறை சார்பில் மாணவர்கள் ஊர்வலமாக சென்றனர். (தினமலர் 3.9.2011)

இந்தியா ஒளிர்கிறது!

வல்லரசாகி ஒளிரப்போகும்!! இந்தியாவில் மட்டுமே குழந்தைகளுக்கு நடக்கும் அதிசயம்.

வயிற்று பிழப்புக்காக .... வயிற்று பிழப்புக்காக திருச்செங்கோடு பழைய பஸ் டாண்டில் இருபுறமும் கட்டப்பட்ட கயிற்றில் சக்கரத்தில் நின்று தலையில் கரகத்துடன் வித்தை காட்டி ஆபத்தான நிலையில் மக்களிடம் பிச்சை எடுக்கும் சிறுமி. (தினமலர் செய்திப்படம் 23.8.2011)

பெண்கள் மற்றும் குழந்தைகள் நல்வாழ்வு அமைச்சகம் இந்தியாவில் இருக்கிறது. பெண்கள் நல வாரியம் என்று தனியாக ஒரு வாரியம் கூட இருக்கிறது.

எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்து இந்தியாவை நன்றாக ஒளிர வைத்து விடுவார்கள். எதில் ஒளிரப்போகிறது என்று பார்த்தால் பொய் வரதட்சணை வழக்குப்போட்டு குடும்பங்களை சிதைத்து குழந்தைகளை நடுத்தெருவில் விட்டு நன்றாக ஒளிரவைத்து விடுவார்கள்.

இப்போதே அது நன்றாக அமோகமாக நடந்துவருகிறது. பல குழந்தைகளுக்கு பெற்ற தகப்பன் பெயர்கூட தெரியாமல் பல குடும்பங்களை சிதைத்து பல அப்பாவிகளின் வயிற்றெரிச்சலில் ஒளிர வைத்துவிட்டார்கள்.

சென்னை நகரில் குழந்தைகளின் அவல நிலை

இந்தியாவில் தலைசிறந்த மாநிலமாகக் கருதப்படும் தமிழகத்தின் தலைநகரில் உள்ள பள்ளிக் குழந்தைகளுக்கே இந்த அவலநிலையென்றால் கிராமங்களில் இருக்கும் குழந்தைகளில் நிலை எப்படி இருக்கும்?

இந்தப் படத்தை பாக்கும் தருணத்தில் இந்தியாவில் குழந்தைகள் நல்வாழ்வு அமைச்சகம் என்று ஒரு மத்திய அமைச்சரகம் இருக்கிறது என்பது கட்டாயம் அனைவருக்கும் நினைவிற்கு வரும். ஊழல் ஒழியாதவரை எத்தனை அரசாங்கம் வந்தாலும் குழந்தைகளின் இன்னல்கள் அதிகரித்துக்கொண்டேதான் இருக்கும்.

(தினமலர் செய்திப்படம் 18/8/2011)