கோடி ஊழலும் கடைக்கோடி இந்தியனின் வாழ்வும்

தினமலர் நவம்பர் 22,2010

மகாவீரர், புத்தர் போன்ற மகான்களின் மிகச் சிறந்த போதனைகளால் சர்வதேச அளவில் இந்தியாவுக்கு புகழ் கிடைத்தது அந்த காலம். இதற்கு பின், மகாத்மா காந்தியின் அஹிம்சை போராட்டங்கள், இந்தியாவின் பெருமையை உலகுக்கு உணர்த்தின. ஆனால், தற்போது இந்திய அரசியல்வாதிகளின் ஊழல் வரலாறு தான், இந்தியாவை உலகுக்கு அடையாளப் படுத்தும் விஷயமாக மாறி விட்டது என்பது வேதனையான உண்மை. இந்தியாவில் நடந்த மிகப் பெரிய ஊழல்களில் சில:

மெகா ஸ்பெக்ட்ரம் ஊழல் 1.76 லட்சம் கோடியில் என்ன செய்யலாம்?

* 2010-11ம் ஆண்டு பட்ஜெட்டில் ராணுவத்துக்கு ஒதுக்கப்பட்ட தொகைக்கு, இந்த 1.76 லட்சம் கோடி ரூபாய் சமம்.

* மத்திய அரசு தாக்கல் செய்யும் பட்ஜெட்டில் இந்த தொகை ஆறில் ஒரு பங்கு.

* பொதுத் துறை நிறுவனங்கள் மூலம் கிடைக்கும் லாபம் மற்றும் டிவிடென்ட் மூலம், அரசுக்கு 51 ஆயிரத்து 309 கோடி ரூபாய் கிடைக்கிறது. "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த ஊழல் தொகை, அதை விட மூன்று பங்கு அதிகம்.

* பட்ஜெட்டில் சுகாதாரத் துறைக்காக 25 ஆயிரத்து 154 கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது. ஸ்பெக்ட்ரம் முறைகேட்டு தொகை இதை விட ஏழு மடங்கு அதிகம்.

* கல்விக்காக பட்ஜெட்டில் அரசு ஒதுக்கும் தொகையை விட, ஊழல் நடந்ததாக கூறப்படும் தொகை மூன்று மடங்கு அதிகம்.

மற்ற ஊழல்கள்:

1. பங்குச் சந்தை ஊழல் 1,000 கோடி

2. சர்க்கரை ஊழல் 650 கோடி

3. போபர்ஸ் ஊழல் 65 கோடி

4. ஹவாலா ஊழல் 65 கோடி

5. எம்.பி., டிரேடிங் 32 கோடி

6. உர ஊழல் 133 கோடி

7. மருத்துவ உபகரண ஊழல் 5,000 கோடி

8. இந்தியன் வங்கி 1,336 கோடி

9. மாட்டுத் தீவன ஊழல் (பீகார்) 1,000 கோடி

10. நில ஊழல் (பீகார்) 400 கோடி

11. வேட்டி - சேலை ஊழல் (தமிழகம்) 11 கோடி

12. நிலக்கரி ஊழல் (தமிழகம்) 750 கோடி ஊழல் செய்யப்பட்ட இந்த தொகையை, நாட்டின் கட்டமைப்புக்கு வசதிக்கு பயன்படுத்தியிருந்தால், இந்தியா, வளர்ச்சி அடைந்த நாடுகளின் பட்டியலில் எப்போதோ இடம் பெற்றிருக்கும்.


மக்களை ஆள்பவர்கள் இப்படி கோடி கோடியாக ஊழல் செய்து ஆனந்தமாக வாழ்ந்து கொண்டிருக்கும்போது கடைக்கோடியில் வாழும் இந்தியக் குழந்தைகளின் நிலை எப்படி இருக்கிறது என்று பின்வரும் படத்தில் பாருங்கள்.

தினமலரில் வெளிவந்த படமும் கருத்தும். ஜூலை 5, 2010




இலவச பஸ் பாஸ் என்பதால் "கலெக்ஷன்' வராது என பல அரசு பஸ் டிரைவர்களும், கண்டக்டர்களும் ஸ்டாப்பில் பஸ்சை நிறுத்துவது இல்லை. இதனால் கையில் புத்தகப்பை சுமையுடன் உயிரை வெறுத்து ஓடி பஸ்சை பிடிக்க நேரிடுகிறது. இதில் மாணவர்கள் அடித்து பிடித்து ஏறுவதால் கீழே விழுந்து காயம் ஏற்படுகிறது. (தினமலர் செய்திப்படம் 2/8/11)


தந்தை என்றால் என்ன?

வந்துட்டேன் அப்பா: திருச்சி காட்டூரைச் சேர்ந்த அசோக்குமார்- ராஜேஸ்வரி தம்பதியரின் திருடு போன 10 மாத குழந்தை சர்வேஸ்வரனை போலீசார் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். காணாமல் போன குழந்தை சர்வேஸ்வரன் கிடைத்த மகிழ்ச்சியில் அசோக்குமார்- ராஜேஸ்வரி தம்பதியர். தந்தையை பார்த்த மகிழ்ச்சியில் கொஞ்சி விளையாடிய குழந்தை சர்வேஸ்வரன்.

=======

தற்போதைய நாட்டு நிலவரப்படி பல குழந்தைகளுக்கு தந்தை என்றால் என்ன என்றுகூட தெரியாமல் போகும் நிலை ஏற்பட்டுவிட்டது. அதற்குக் காரணம் ஏராளமாகக் குவிந்துகொண்டிருக்கும் பொய் வரதட்சணை வழக்குகள்.

மருமகள்கள் கொடுக்கும் பொய்யான வரதட்சணை புகார்களை எந்தவித விசாரணையுமின்றி காவல்துறை மனிதாபிமானம் இல்லாமல் வழக்காக பதிவுசெய்து பல குடும்பங்களை சிதைத்துவிட்டார்கள். இதற்கு நீதிமன்றத்தின் ஆதரவு மிகவும் நன்றாகவே இருக்கிறது. இதுபோன்ற சூழலில் பல குழந்தைகள் தந்தையிடமிருந்து பிரிக்கப்பட்டு தந்தையற்ற குழந்தைகளாக வளர்ந்து கொண்டிருக்கின்றன. இதனால் ஏற்படப்போகும் சமூக விளைவுகளை இன்னும் சில ஆண்டுகளில் நாடு சந்திக்கத்தான் போகிறது. இதைப் பற்றித் தெரிந்து கொள்ள இந்த இணைய தளத்தில் சென்று பாருங்கள்: http://www.crisp-india.org/

பொய் வரதட்சணை வழக்கு என்றால் என்ன என்று தெரியாதவர்கள் இங்கே சென்று பாருங்கள்
பெண்கள் நாட்டின் கண்கள்!!




பாரத மண்ணில் பிள்ளைகளின் நிலை

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வைகைக்கரையில் திதி கொடுக்க வருவோர் தரும் பொங்கலை, குவிந்து கிடக்கும் குப்பையோரம் சுகாதாரமாக(?) சாப்பிடும் சிறுமிகளும், சிறு பன்றிகளும். இதனைத்தான் சமத்துவப்பொங்கல் என்பதோ. (தினமலர் 8/1/2012)

இந்தியாவில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் வாழ்வு மேம்பட ஒவ்வொரு ஆண்டும் ஐக்கிய நாடுகள் சபை பல கோடி ரூபாய் நிதியுதவி செய்கிறது. இந்த பல கோடி ரூபாய் மத்திய அமைச்சகங்களுக்கு பங்கு போட்டு கொடுக்கப்படுகிறது.

[நிதி ஒதுக்கீட்டின் தற்போதைய நிலவரம் இது - The schemes/programmes that address violence against women are budgeted both in the Union and the State budgets (depending upon whether it is a Centrally sponsored scheme, or is a State scheme). It is not possible to give the exact budgetary allocation as many Ministries meet the expenditure from their general budget. There is gender budgeting in India and Gender Budget Statement (Statement 20) is part of the Union Budget. It includes grants for demands from different ministries/departments. Grants under Part A deal with 100 per cent women specific programmes and Part B deal with 30 per cent women specific programmes. For the year 2010-2011, the total allocation is Rs. 67,749.80 crores (Rs. 19,266.05 crores for Part A and Rs 48,483.75 crores for part B).]

நாட்டில் இவ்வளவு ஒதுக்கீடு நடந்துகொண்டிருந்தாலும் இந்தியக் குழந்தைகளின் நிலை ஏன் இப்படி இருக்கிறது என்று சற்று ஆராய்ந்து பார்த்து தேசிய மகளிர் வாரியத்தின் நிதி தணிக்கை அறிக்கையை பார்த்தால் உங்களுக்கே பதில் தெரியும்.

படத்தின் மீது ‘கிளிக்’ செய்து பெரிதாக்கிப் படிக்கலாம்


498A குழந்தைகளின் பரிதாபமான நிலை

பொய் வரதட்சணை வழக்குப்போடும் மருமகள்களின் வீட்டில் இருக்கும் குழந்தைகள் படும்பாடு இதுதான்.

குழந்தை யாருக்கு?

விவாகரத்து வழக்குகளில் குழந்தைகளின் விருப்பத்துக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்
12/20/2011 தினகரன்

புதுடெல்லி : விவாகரத்து வழக்குகளில், குழந்தைகளின் விருப்பத்துக்கு நீதிமன்றங்கள் அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

விவகாரத்து பெற்ற தம்பதிகள், அவர்களின் குழந்தைகளை தங்கள் பாதுகாப்பில் வளர்க்க உரிமை கோரி ஏராளமான வழக்குகள் தொடுக்கப்படுகின்றன. இது போன்ற வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் சதாசிவம், சலேமேஸ்வர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.

17 வயது, 11 வயது மகள்களை தங்கள் பாதுகாப்பில் வளர்க்க பிரிந்து சென்ற பெற்றோர் உரிமை கோரினர். பிள்ளைகள் இருவரின் விருப்பத்தை நீதிபதிகள் நேரில் கேட்டனர். தந்தையிடம் வளர விரும்புவதாக இருவரும் கூறினர். இதையடுத்து தந்தையிடம் பிள்ளைகள் வளர உத்தரவிட்ட நீதிபதிகள், வார இறுதி நாட்கள் தாய் தனது மகள்களை சந்தித்து பேசலாம் என உத்தரவிட்டனர். இந்த தீர்ப்பில் நீதிபதிகள் கூறியதாவது:

இந்த வழக்கின் உண்மை நிலவரங்களை ஆராய்ந்து குழந்தைகளின் விருப்பத்தை கேட்டதில், தந்தையின் பாதுகாப்பில் குழந்தைகள் தொடர்ந்து வளர்ந்தால் சிறந்தது என முடிவு செய்தோம். தற்போது தந்தையின் பாதுகாப்பில் குழந்தைகள் வளர்ந்து வருவதை இடையூறு செய்வது நல்லதல்ல என கருதுகிறோம். தாய்க்கும் குழந்தைகளை பார்க்கும் உரிமை வழங்குவதன் மூலம் நீதி வழங்கப்பட்டதாக உணர்கிறோம்.

பிரிந்து சென்ற பெற்றோர் தொடுக்கும் வழக்குகளில் அவர்களின் உரிமைக்கு முக்கியத்துவம் அளிக்காமல், குழந்தைகளின் நலன் மற்றும் விருப்பத்துக்கு நீதிமன்றங்கள் அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும். பாதுகாவலர் மற்றும் குழந்தைகள் சட்டம் 1890, இந்து சிறுபான்மையினர் மற்றும் பாதுகாவலர் சட்டம் 1956 ஆகியவற்றிலும், குழந்தைகளின் நலனுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. நீதிமன்றங்கள் குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு தீர்ப்பளிக்க வேண்டும் என்றனர்.

உண்மையான குழந்தைகள் யார்?

இந்தியாவில் இப்போது அரசாங்க உதவியுடன் பொய் வரதட்சணை வழக்குகளால் பல குடும்பங்கள் சிதைந்து கொண்டிருக்கின்றன. இதுபோன்று சிதையும் குடும்பங்களில் இருக்கும் குழந்தைகளுக்கு அப்பா, அம்மா ஆகிய இருவரும் உயிரோடு இருந்தாலும் இறந்தவர்களுக்குச் சமம்தான்.

தவறான தூண்டுதல்களாலும், லஞ்சத்திற்காகவும் ஆசைப்பட்டு உருவாக்கப்படும் பல பொய் வரதட்சணை வழக்குகள் கடைசியில் விவாகரத்துக்களில்தான் போய் முடிகின்றன. இதன் மூலம் குடும்பங்கள் பிரியும்போது அந்தக் குடும்பத்திலுள்ள குழந்தைகள் கண்டிப்பாக தனது தந்தையை இழந்து விடும். இந்தியத் திருமணச் சட்டங்களும், வழக்குகளை தேவையில்லாமல் நீட்டித்து இன்பம் காணும் சட்ட நடைமுறைகளும் இந்த புண்ணிய காரியத்திற்கு மிகவும் உதவி செய்கின்றன.

இதன்விளைவாக பல குழந்தைகளுக்கு தன் தகப்பன் யாரென்று தெரியாமலும், அப்படித் தெரிந்தாலும் அவனைக் காணமுடியாமலும் இருக்கிறார்கள். அதுபோலவே தந்தைப் பாசத்துடன் பல தந்தையர்கள் தங்களது குழந்தைகளிடமிருந்து தவறான சட்டங்களால் பிரிக்கப்பட்டு மன வேதனை அடைந்துகொண்டிருக்கிறார்கள்.

சமூக மற்றும் இந்திய சட்டத்தின் கண்ணோட்டத்தில் பெண்ணுக்கு மட்டும்தான் குழந்தைப் பாசம் இருப்பதாகவும், ஆணுக்கு எந்தவித உணர்ச்சியும் இல்லை என்றும் ஒரு தவறான மனப்பான்மை இருந்து வருகிறது. இதனை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்த சமீபத்திய திரைப்படம் “தெய்வத் திருமகன்”. அந்தத் திரைப்படத்திற்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.

இதுபோன்ற ஒரு துயரமான சூழலில் குழந்தைகளின் நலனுக்காகப் போராடும் Child Rights Initiative என்ற அமைப்பு சென்னையில் குழந்தைகள் தினத்தை உண்மையான குழந்தைகளுடன் சேர்ந்து கொண்டாடியிருக்கிறார்கள். அதனை பின்வரும் வீடியோவில் பாருங்கள்.

இந்தியாவில் இனி இதுபோல நடக்குமா?


கல்விக்கு உகந்த விஜயதசமி நாளில் மழலைகளுக்கு வித்யாரம்பம் எனும் எழுத்தறிவிக்கும் பணியில் மழலைகளுடன் பெற்றோர்கள் உற்சாக பங்கேற்றனர்.இடம்: சரஸ்வதிகோயில், திருநெல்வேலி. (தினமலர் செய்திப் படம் 7/10/2011)
=====

இந்திய அரசாங்கத்தால் இயற்றப்பட்டுள்ள பல மருமகள் பாதுகாப்பு சட்டங்களால் (IPC498A, Domestic Violence Act) பல குடும்பங்கள் சிதைந்துள்ளன. இன்றும் பல குடும்பங்கள் சிதைந்து கொண்டிருக்கின்றன. இதுபோன்ற சூழ்நிலையில் பல குழந்தைகளுக்கு மேலை நாடுகளில் இருப்பது போல ஒற்றை பெற்றோர் மட்டுமே இருக்கிறார்கள். இது போன்று உருவாகிக்கொண்டிருக்கும் பல குடும்பங்களில் எதிர்காலத்தில் குழந்தைகளுக்கு தாய், தந்தை என்ற முழுமையான பெற்றோர்கள் இல்லாத எதிர்காலம்தான் காத்திருக்கிறது.

அன்னையும், பிதாவும் முன்னறி தெய்வம் என்று உலகிற்கு பறைசாற்றிய இந்திய நாட்டில் இப்போது குழந்தைகளின் நிலை என்னவாகும் என்று கடவுளுக்கு மட்டுமே தெரியும்!