இந்தியாவில் இனி குழந்தைகளின் எதிர்காலம் ஒரு கேள்விக்குறி?

சமீப காலமாக இந்தியாவில் கணவனுக்கெதிராக பொய் வரதட்சணை வழக்கு தொடுக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதன் மூலம் பல குடும்பங்கள் சிதைந்து அந்தக் குடும்பங்களில் இருக்கும் குழந்தைகளின் நிகழ்காலமும், எதிர்காலமும் எப்படி இருக்கும் என்று எண்ணிப்பார்க்கவே முடியாத சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது.

இதுபோன்று பொய் வரதட்சணை வழக்குகளை உருவாக்கி பெண்களுக்கு உதவி செய்கிறோம் என்ற பெயரில் குடும்பங்களை அழித்து அதன் மூலம் பணம் சம்பாதிக்க பிணந்திண்ணி கழுகு போல ஒரு கூட்டமே வட்டமடித்துக் கொண்டிருக்கிறது. அந்தக் கூட்டத்திற்கு சிதைக்கப்படும் குடும்பங்களில் இருக்கும் குழந்தைகளின் வேதனையைப் பற்றி உணர முடியுமா?

குடும்ப அமைப்பு சீர்கேடு அடைந்துவரும் இதுபோன்ற சூழ்நிலையில் “எரியும் தீயில் எண்ணெய் ஊற்றுவதுபோல” இந்திய அரசாங்கம் புதிய சட்டங்களை இயற்றிவருகிறது. குறிப்பாக “பெண்ணுரிமை” என்ற பெயரில் புதிதாக வரப்போகும் விவாகரத்து சட்டத்தில் மனைவி விவாகரத்து கோரினால் உடனடியாக கிடைக்கும் வகையில் திருத்தம் கொண்டு வரவிருக்கிறார்கள். ஆனால் அதே சமயம் கணவன் விவாகரத்து கோரும்போது விவாகரத்து கிடைக்காத வகையில் இந்த சட்டம் வழிவகை செய்திருக்கிறது.

இந்த சட்டம் அமலுக்கு வந்தால் கணவனோ, மனைவியோ தனது மனம்போன போக்கில் வாழக்கையை வாழ ஆரம்பித்துவிடுவார்கள். பல விவாகரத்து வழக்குகள் நீதிமன்றத்திற்கு எளிதாக வர ஆரம்பித்து விடும். வழக்கறிஞர்கள் காட்டில் பணமழையாக இருக்கும்! நீதிபதிகளுக்கு குடும்பங்களை பிரித்து வைப்பதற்கு மாதந்தோறும் சம்பளம் தவறாமல் கிடைத்துவிடும்!! ஆனால் இதுபோன்ற குடும்பங்களில் இருக்கும் ஒரு பாவமும் அறியாத குழந்தைகளின் நிலை பற்றி இந்த சட்டத்தில் ஒன்றும் சொல்லப்படவில்லை.

பெண்களின் நலனில் மட்டுமே கவனம் செலுத்தி சட்டங்களை இயற்றும் மேதைகள் அப்பாவிக் குழந்தைகளின் நலனில் சிறு துளி கூட அக்கறை காட்டவில்லை என்பது மிகவும் வேதனையாக இருக்கிறது. இந்த நிலை இப்படியே நீடித்தால் இந்தியாவில் குழந்தைகளின் எதிர்காலம் வேதனை மிகுந்த கேள்விக் குறியாகிவிடும் என்பதில் துளியும் சந்தேகமில்லை என்பதை பின்வரும் செய்தி காட்டுகிறது.

குழந்தைப் பருவத்தில் தாய், தந்தை இருவருடன் வாழும் வாழ்க்கையில் இருக்கும் இன்பம் சொர்கத்தில் வாழ்ந்தாலும் கிடைக்காது என்பது அனைவரும் உணர்ந்து அறிந்த உண்மை. இது ஏன் இந்திய அரசியல்வாதிகளுக்கும், சட்ட மேதைகளுக்கும், பெண்ணியவாதிகளுக்கு மட்டும் தெரியவில்லை என்பது புரியாத புதிராக இருக்கிறது. அல்லது யாருடைய குடும்பமோ அழிந்து குழந்தைகள் நடுத்தெருவிற்கு வந்தால் நமக்கென்ன என்ற எண்ணமா?

பெற்றோர் பிரிந்ததால் மகன் தற்கொலை

தினமலர் 5 மே 2012

செங்கல்பட்டு:பெற்றோர் பிரிந்து வாழ்வதால் மனமுடைந்த வாலிபர், தூக்குப் போட்டு இறந்தார்.

செங்கல்பட்டு பெரிய நத்தம் வீரபத்திரனார் தெருவைச் சேர்ந்தவர் பாலசுந்தரம். இவரது மகன் சிவராமகிருஷ்ணன், 20. பட்டய படிப்பு முடித்துவிட்டு, வேலை தேடி வந்தார். சற்று மனநலம் பாதிக்கப்பட்டு, சிகிச்சையும் பெற்று வந்தார்.இவரது தந்தையும், தாயும், கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கின்றனர்.இதனால் மனமுடைந்திருந்த சிவராமகிருஷ்ணன், நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு, வீட்டில் தூக்குப் போட்டு இறந்தார்.

இந்த செய்தியைத் தொடர்ந்து இந்த வீடியோக்களையும் பாருங்கள்...இதில் சிறு பெண்கள் கேட்கும் கேள்விகளுக்கு உங்களால் பதில் சொல்ல முடிகிறதா என்று யோசித்துப் பாருங்கள்.




பொய் வரதட்சணை வழக்கு போடும் பெண்களின் வயிற்றில் பிறந்த குழந்தைகளுக்காக...

ஆணவம், அகங்காரம் போன்றவற்றின் காரணமாக கணவனையும் அவனது குடும்பத்தையும் அடக்கி ஆள வேண்டும் என்ற கர்வத்தால் தனது குழந்தையின் நலனைக்கூட கருத்தில் கொள்ளாமல் கணவனுக்கெதிராக பொய் வரதட்சணை வழக்குப் போடும் பாதகிகளின் வயிற்றில் பிறந்த குழந்தைகள் நீதிமன்றங்களால் தந்தைகளிடமிருந்து பிரிக்கப்படுகின்றன. அதுபோன்ற குழந்தைகளின் வாழ்வில் “தந்தை” என்ற ஒரு பாசமிகு உறவே கடைசிவரை இல்லாமல் போய்விடுகிறது. அதுபோன்ற குழந்தைகளுக்கு ஒரு தந்தை பாடும் பாடல் இந்த வீடியோக் காட்சியில் உள்ளது.

தந்தைகளுக்கும் மனம் இருக்கிறது. பிள்ளைப் பாசம் இருக்கிறது என்பதை இந்திய சட்டங்கள் மறுக்கின்றன.


கோடி ஊழலும் கடைக்கோடி இந்தியனின் வாழ்வும்

தினமலர் நவம்பர் 22,2010

மகாவீரர், புத்தர் போன்ற மகான்களின் மிகச் சிறந்த போதனைகளால் சர்வதேச அளவில் இந்தியாவுக்கு புகழ் கிடைத்தது அந்த காலம். இதற்கு பின், மகாத்மா காந்தியின் அஹிம்சை போராட்டங்கள், இந்தியாவின் பெருமையை உலகுக்கு உணர்த்தின. ஆனால், தற்போது இந்திய அரசியல்வாதிகளின் ஊழல் வரலாறு தான், இந்தியாவை உலகுக்கு அடையாளப் படுத்தும் விஷயமாக மாறி விட்டது என்பது வேதனையான உண்மை. இந்தியாவில் நடந்த மிகப் பெரிய ஊழல்களில் சில:

மெகா ஸ்பெக்ட்ரம் ஊழல் 1.76 லட்சம் கோடியில் என்ன செய்யலாம்?

* 2010-11ம் ஆண்டு பட்ஜெட்டில் ராணுவத்துக்கு ஒதுக்கப்பட்ட தொகைக்கு, இந்த 1.76 லட்சம் கோடி ரூபாய் சமம்.

* மத்திய அரசு தாக்கல் செய்யும் பட்ஜெட்டில் இந்த தொகை ஆறில் ஒரு பங்கு.

* பொதுத் துறை நிறுவனங்கள் மூலம் கிடைக்கும் லாபம் மற்றும் டிவிடென்ட் மூலம், அரசுக்கு 51 ஆயிரத்து 309 கோடி ரூபாய் கிடைக்கிறது. "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த ஊழல் தொகை, அதை விட மூன்று பங்கு அதிகம்.

* பட்ஜெட்டில் சுகாதாரத் துறைக்காக 25 ஆயிரத்து 154 கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது. ஸ்பெக்ட்ரம் முறைகேட்டு தொகை இதை விட ஏழு மடங்கு அதிகம்.

* கல்விக்காக பட்ஜெட்டில் அரசு ஒதுக்கும் தொகையை விட, ஊழல் நடந்ததாக கூறப்படும் தொகை மூன்று மடங்கு அதிகம்.

மற்ற ஊழல்கள்:

1. பங்குச் சந்தை ஊழல் 1,000 கோடி

2. சர்க்கரை ஊழல் 650 கோடி

3. போபர்ஸ் ஊழல் 65 கோடி

4. ஹவாலா ஊழல் 65 கோடி

5. எம்.பி., டிரேடிங் 32 கோடி

6. உர ஊழல் 133 கோடி

7. மருத்துவ உபகரண ஊழல் 5,000 கோடி

8. இந்தியன் வங்கி 1,336 கோடி

9. மாட்டுத் தீவன ஊழல் (பீகார்) 1,000 கோடி

10. நில ஊழல் (பீகார்) 400 கோடி

11. வேட்டி - சேலை ஊழல் (தமிழகம்) 11 கோடி

12. நிலக்கரி ஊழல் (தமிழகம்) 750 கோடி ஊழல் செய்யப்பட்ட இந்த தொகையை, நாட்டின் கட்டமைப்புக்கு வசதிக்கு பயன்படுத்தியிருந்தால், இந்தியா, வளர்ச்சி அடைந்த நாடுகளின் பட்டியலில் எப்போதோ இடம் பெற்றிருக்கும்.


மக்களை ஆள்பவர்கள் இப்படி கோடி கோடியாக ஊழல் செய்து ஆனந்தமாக வாழ்ந்து கொண்டிருக்கும்போது கடைக்கோடியில் வாழும் இந்தியக் குழந்தைகளின் நிலை எப்படி இருக்கிறது என்று பின்வரும் படத்தில் பாருங்கள்.

தினமலரில் வெளிவந்த படமும் கருத்தும். ஜூலை 5, 2010




இலவச பஸ் பாஸ் என்பதால் "கலெக்ஷன்' வராது என பல அரசு பஸ் டிரைவர்களும், கண்டக்டர்களும் ஸ்டாப்பில் பஸ்சை நிறுத்துவது இல்லை. இதனால் கையில் புத்தகப்பை சுமையுடன் உயிரை வெறுத்து ஓடி பஸ்சை பிடிக்க நேரிடுகிறது. இதில் மாணவர்கள் அடித்து பிடித்து ஏறுவதால் கீழே விழுந்து காயம் ஏற்படுகிறது. (தினமலர் செய்திப்படம் 2/8/11)