உண்மையான குழந்தைகள் யார்?

இந்தியாவில் இப்போது அரசாங்க உதவியுடன் பொய் வரதட்சணை வழக்குகளால் பல குடும்பங்கள் சிதைந்து கொண்டிருக்கின்றன. இதுபோன்று சிதையும் குடும்பங்களில் இருக்கும் குழந்தைகளுக்கு அப்பா, அம்மா ஆகிய இருவரும் உயிரோடு இருந்தாலும் இறந்தவர்களுக்குச் சமம்தான்.

தவறான தூண்டுதல்களாலும், லஞ்சத்திற்காகவும் ஆசைப்பட்டு உருவாக்கப்படும் பல பொய் வரதட்சணை வழக்குகள் கடைசியில் விவாகரத்துக்களில்தான் போய் முடிகின்றன. இதன் மூலம் குடும்பங்கள் பிரியும்போது அந்தக் குடும்பத்திலுள்ள குழந்தைகள் கண்டிப்பாக தனது தந்தையை இழந்து விடும். இந்தியத் திருமணச் சட்டங்களும், வழக்குகளை தேவையில்லாமல் நீட்டித்து இன்பம் காணும் சட்ட நடைமுறைகளும் இந்த புண்ணிய காரியத்திற்கு மிகவும் உதவி செய்கின்றன.

இதன்விளைவாக பல குழந்தைகளுக்கு தன் தகப்பன் யாரென்று தெரியாமலும், அப்படித் தெரிந்தாலும் அவனைக் காணமுடியாமலும் இருக்கிறார்கள். அதுபோலவே தந்தைப் பாசத்துடன் பல தந்தையர்கள் தங்களது குழந்தைகளிடமிருந்து தவறான சட்டங்களால் பிரிக்கப்பட்டு மன வேதனை அடைந்துகொண்டிருக்கிறார்கள்.

சமூக மற்றும் இந்திய சட்டத்தின் கண்ணோட்டத்தில் பெண்ணுக்கு மட்டும்தான் குழந்தைப் பாசம் இருப்பதாகவும், ஆணுக்கு எந்தவித உணர்ச்சியும் இல்லை என்றும் ஒரு தவறான மனப்பான்மை இருந்து வருகிறது. இதனை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்த சமீபத்திய திரைப்படம் “தெய்வத் திருமகன்”. அந்தத் திரைப்படத்திற்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.

இதுபோன்ற ஒரு துயரமான சூழலில் குழந்தைகளின் நலனுக்காகப் போராடும் Child Rights Initiative என்ற அமைப்பு சென்னையில் குழந்தைகள் தினத்தை உண்மையான குழந்தைகளுடன் சேர்ந்து கொண்டாடியிருக்கிறார்கள். அதனை பின்வரும் வீடியோவில் பாருங்கள்.