பெண்ணுரிமை பேச நாம் தகுதியானவர்களா?

சிறைச்சாலையில்கூட பெண்ணுரிமையை போற்றி பெண்கள் தினத்தில் களியாட்ட நிகழ்ச்சிகள் நடத்தி மகிழும் இந்தியாவில் காணாமல் போன 75,000 குழந்தைகள் பற்றி என்றாவது யாராவது கவலைப்பட்டதுண்டா?

[சில்..சிறைப்பறவைகள்: உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, டில்லி திகார் சிறை பெண் கைதிகளின், பேஷன் ஷோ, திகார் சிறை வளாகத்தில், நடந்தது. (தினமலர்)]

தாய்மை இருந்தால்தானே குழந்தைகளைப் பற்றிய எண்ணம் மனதில் தோன்றும்?   கள்ளக்காதலுக்காக குழந்தைகளை கொல்வதும், கணவனை பழிவாங்குவதற்காக போடப்படும் பொய் வரதட்சணை வழக்குகளில் குழந்தையை பகடைக்காயாக்கி நீதிமன்றங்களில் கேளிக்கைப் பொருளாக குழந்தைகளை வைத்து நீதிபதிகளின் உதவியுடன் குழந்தைகளை தகப்பனிடமிருந்து பிரித்து தந்தையில்லாத பல குழந்தைகளை உருவாக்கிக்கொண்டிருக்கும் நாட்டில் குழந்தைகளைப் பற்றி யார்தான் கவலைப்படப்போகிறார்கள்?
 மார்ச் 10,2013 தினமலர்


புதுடில்லி:கடந்த, 2011 வரையிலான, மூன்று ஆண்டுகளில், நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த, 75 ஆயிரம் குழந்தைகள் காணாமல் போயுள்ளன; அவர்களின் நிலை என்னவென்று இதுவரை தெரியவில்லை.

லோக்சபாவில், சிவசேனா எம்.பி., அனில் தேசாய் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த, மத்திய பார்லிமென்ட் விவகாரத் துறை இணை அமைச்சர், பாபன் சிங் கத்தோவர் கூறியதாவது:

கடந்த, 2009, 2010 மற்றும் 2011ம் ஆண்டுகளில், நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த, 2.36 லட்சம், குழந்தைகள் காணாமல் போயின. இவர்களில், 1.61 லட்சம் குழந்தைகள், இதுவரை கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள, 75 ஆயிரம் குழந்தைகளின் நிலை என்னவென்று தெரியவில்லை. இவர்களை கண்டுபிடிக்க, மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன.
சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி, ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும், காணாமல் போன குழந்தைகளை
கண்டறிய, சிறப்பு அதிகாரி ஒருவரை நியமிக்க உத்தரவிட்டுள்ளோம்.
இவ்வாறு அமைச்சர் கத்தோவர் கூறினார்.

No comments: