குழந்தையின் டைரி - அன்னையர் தினத்தில் ஓர் அறிமுகம்

அன்னையர் தினமான இன்று என்போன்ற அப்பாவிக் குழந்தைகள் பலரின் வாழ்க்கை எப்படி தன்னைப் பெற்றெடுத்தப் பெண்களால் சீரழிக்கப்படுகிறது என்ற மனக்குமுறலை கொட்டும் பிரதிநிதியாக என்னுடைய டைரிக்குறிப்பு இருக்கும். இந்தியாவில் உள்ள பெண்கள்பாதுகாப்பு சட்டங்களை தங்களின் சுயநலத்திற்காகப் பல பெண்கள் வஞ்சம் தீர்க்கும் ஆயுதமாக தங்களின் கணவனுக்கெதிராக பயன்படுத்திக்கொண்டு சந்தோஷம் அடைகிறார்கள். ஆனால், கணவனுக்கும் மனைவிக்கும் நடுவில் நடக்கும் இந்த சட்ட வன்முறை யுத்தத்தில் பலியாக்கப்படுவது என்போன்ற அப்பாவிக்குழந்தைகள். எங்களின் வாழ்வில் மற்றக் குழந்தைகளுக்கு கிடைக்கும் தாய் தந்தை என்ற பெற்றோர்களின் பாசமும் அரவணைப்பும் இல்லாமல் பாசத்திற்கு ஏங்கி நிற்கும் பிஞ்சு உள்ளங்களாக மனம் வெதும்பி அழுகின்றோம்.

எங்களின் தாய் தந்தையர் நன்கு படித்தவர்கள், நல்ல பதவியும், வருமானமும் உள்ளவர்கள். ஆனால் இந்த எந்த வசதியும் இல்லாத ஏழைக்குழந்தைகளுக்குக் கிடைக்கும் பெற்றோர்களின் அரவணைப்பு என்ற கிடைத்தற்கரிய பாசம் எங்களைப்போன்ற 498A-தாயின் வயிற்றில் பிறந்த குழந்தைகளுக்குக் கிடைப்பதில்லை. நாங்கள் செய்த பாவம் என்ன? இந்தியாவில் பிறந்ததா? இந்தியத்தாயின் வயிற்றில் பிறந்ததா?

இவை எல்லாவற்றிற்கும் மேலாக இந்திய சட்டங்கள் எங்களை தந்தையற்ற அனாதையாகவே மாற்றிவிட்டது. எங்களின் தந்தையரின் பாசமும் அரவணைப்பும் கிடைக்காமல் இந்திய சட்டங்கள் தடைக்கற்களாக இருந்துவருகின்றன.

ஒட்டுமொத்தத்தில் 498A-தாயின் வயிற்றில் பிறந்ததால் எங்களை நீதிமன்றங்களில் “Child Custody” என்ற பெயரில் தாயும், தந்தையும், வழக்கறிஞர்களும், நீதிபதிகளும் எங்களை ஒரு மனித உயிராக மதிக்காமல் அவர்களின் வஞ்சத்தை தீர்த்துக்கொள்ளவும், பணம் சம்பாதிக்கவும் பயன்படுத்தும் பகடைக் காய்களாக மாற்றி விளையாடிக்கொண்டிருக்கிறார்கள். இந்த அவலம் எங்களுக்கு ஏற்பட்டது ஏன்?

உலக எய்ட்ஸ் தினம் என்று ஒன்று இருக்கிறது. அது எதற்கு? எய்ட்ஸ் நோயைப் பற்றி போற்றி மகிழ்ச்சியடைவதற்கா? இல்லை. அந்த நோயின் கொடூரத்தை அனைவருக்கும் வெளிப்படுத்தி விழிப்புணர்ச்சி ஏற்படுத்துவதற்குத்தான் அந்த தினம். அது போல 498A சட்டத்தின் தவறான பயன்பாட்டால் பாதிக்கப்பட்டிருக்கும் எங்களைப் போன்ற அப்பாவிக் குழந்தைகளைப் பொறுத்தவரை “அன்னையர் தினம்” என்பது சட்டத்தை தவறாகப்பயன்படுத்தி எங்களைப் போன்ற அப்பாவிக் குழந்தைகளை இழிமை செய்யும் தாய் என்ற பெயரில் இருக்கும் இழிபிறவிகளைப் பற்றிய அபாயத்தை அனைவருக்கும் வெளிக்காட்டுவதற்குத்தான் இந்த அன்னையர் தினம்.

மனக்குமுறல்கள் தொடரும்........

No comments: