குழந்தைகளைப் பந்தாடும் கயவர்கள்

தங்களது சுயநலத்திற்காக சட்டத்தைப் பயன்படுத்தி என்போன்ற அப்பாவிக் குழந்தைகளை வைத்து பந்தாடும் கயவர்களும், தங்களின் வருமானத்திற்காக குடும்பங்களை அழிப்பதற்கென்றே பல சட்டங்களை இயற்றிக்கொண்டிருக்கும் கயவர்களும் இருக்கின்ற நாட்டில் பிறந்தது என்போன்ற குழந்தைகளின் குற்றமா?
தினமலர் 21 மே 2010


சென்னை : பிறந்த நாளை முன்னிட்டு, கோவிலுக்கு அழைத்துச் செல்ல இரண்டு குழந்தைகளையும் தந்தையிடம் ஒப்படைக்க வேண்டும் என, மனைவிக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மனைவி அனிதா. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். கணவன், மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்கின்றனர். குழந்தைகள் இருவரையும் தன்னிடம் ஒப்படைக்கக் கோரி, சென்னை ஐகோர்ட்டில் கிருஷ்ணன் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு நிலுவையில் இருக்கும் போது, தனது குழந்தைகளை இடைக்காலமாக ஒப்படைக்கக் கோரி, மனு தாக்கல் செய்தார். இம்மனு நீதிபதி அரிபரந்தாமன் முன் விசாரணைக்கு வந்தது. கிருஷ்ணன் சார்பில் ஆஜரான வக்கீல், "மூத்த மகனுக்கு 22ம் தேதி (இன்று) பிறந்த நாள் வருகிறது. எனவே, குழந்தைகளை பார்க்க கிருஷ்ணனை அனுமதிக்க வேண்டும்' என்றார்.

இதையடுத்து, நீதிபதி அரிபரந்தாமன் பிறப்பித்த உத்தரவில், "இரண்டு குழந்தைகளையும் கோவிலுக்கு அழைத்துச் செல்ல கிருஷ்ணனுக்கு அனுமதியளிக்கப்படுகிறது. காலை 10 மணி முதல் 12 மணி வரை அனுமதியளிக்கப்படுகிறது. காலை 10 மணிக்கு இரண்டு குழந்தைகளையும் கிருஷ்ணனிடம் அனிதா ஒப்படைக்க வேண்டும். 12 மணிக்கு குழந்தைகளை தாயாரிடம் மனுதாரர் ஒப்படைக்க வேண்டும்' என, கூறியுள்ளார்.

மற்றொரு செய்தி: மகளை ஒப்படைக்கக் கோரி தந்தை மனு பதிலளிக்க தாயாருக்கு ஐகோர்ட் நோட்டீஸ்

No comments: