அன்னையர் தினத்தில் ஒரு மானக்கேடு

அன்னையர் தினத்தில் தமிழ்நாட்டில் குழந்தைகள் நிலை இப்படியா? மிகவும் வேதனை.

ஒரே வாரத்தில் 2 குழந்தை வீச்சு இது மணப்பாறை நகர அவலம்
மே 07,2011 தினமலர்

மணப்பாறை: மணப்பாறை அருகே பிறந்து சில மணி நேரமேயான ஆண் குழந்தையை ரோட்டோரம் வீசிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒரே வாரத்தில் இது இரண்டாவது சம்பவம் ஆகும். மணப்பாறை, வெள்ளக்கல்லில் உள்ள அனிதா காஸ் சிலிண்டர் குடோன் அருகே நேற்று காலை 7.30 மணியளவில் ரோட்டோரம் துணி சுற்றப்பட்ட நிலையில் பிறந்து சில மணிநேரமே ஆன ஆண் குழந்தை கிடந்தது. அவ்வழியாகச் சென்றவர்கள் குழந்தையின் அழுகுரல் கேட்டு அருகே சென்று பார்த்தபோது குழந்தை அங்கு போடப்பட்டிருப்பது தெரியவந்தது. மணப்பாறை போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் இளஞ்செழியன் சம்பவ இடம் சென்று குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் குழந்தை சேர்க்கப்பட்டுள்ளது

கடந்த நான்கு நாட்களுக்கு முன் இதே பகுதியில் காய்கறி மார்க்கெட் அருகில் இதேபோல பெண் குழந்தை கிடந்தது. சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அக்குழந்தை சில மணிநேரத்தில் இறந்தது குறிப்பிடத்தக்கது.

தவறான உறவால் பிறந்த குழந்தைகள் என்பதால் வீசப்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? எனவும் குழந்தையின் பெற்றோர் யார்? எனவும் போலீஸார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். ஒரே வாரத்தில் இரண்டு குழந்தைகள் அனாதையாக வீசப்பட்ட சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

No comments: