இந்தியாவில் குழந்தையாக பிறப்பது பாவமா?



நாகப்பட்டினம் : கள்ளக்காதலனுடன் சேர்ந்து வாழ, தடையாக இருந்த இரண்டு குழந்தைகளை கொலை செய்து, ஆற்றில் வீசிய தாய்க்கு, இரட்டை ஆயுள் தண்டனை விதித்து, நாகை கோர்ட் உத்தரவிட்டது. காரைக்கால், [...]


அற்ப மனிதர்களின் கள்ளக்காமத்திற்கு அப்பாவிக் குழந்தைகள்தான் பலியாகிறார்கள். இந்தியாவில் கள்ளக்காமத்திற்காக இதுபோன்று குழந்தைகள் கொல்லப்படுதல், துன்புறுத்துதல் போன்ற செயல்கள் சர்வசாதாரணமாக நடக்கிறது. இதுபோன்ற அப்பாவிக் குழந்தைகளைக் காப்பாற்ற எந்த ஒரு சட்டமும் இல்லை. குழந்தையை ஒருவனிடம் பெற்றுவிட்டு வேறு ஒருவனுடன் கள்ளக்காமத்தில் ஈடுபடும் பெண்ணை தண்டிப்பதற்கு இந்திய சட்டத்தில் இடமே கிடையாது. அதனால்தான் இதுபோல பல கள்ளக்காம வழக்குகள் நாளுக்கு நாள் அதிகமாக உருவாகின்றன. சட்டத்தின் துணையோடு மனித மிருகங்கள் நடத்தும் காமக் களியாட்டத்தில் கடைசியில் பலியாவது அப்பாவிக் குழந்தைகள்தான்.

இதுபோலத்தான் சமீபத்தில் ஒரு வரதட்சணை வழக்கில் குற்றவாளியை கைதுசெய்கிறேன் என்ற பெயரில் ஒர கர்ப்பிணியை கைதுசெய்து துன்புறுத்தி அவர் வயிற்றில் இருந்த சிசுவை பிறப்பதற்கு முன்பே அழித்துவிட்டார்கள். அந்த சிசுவிற்கு நீதி வழங்கப்போவது யார்? (கர்ப்பிணியின் கருவறுத்த காவல்துறை - இந்திய வரதட்சணை வழக்குகளின் உச்சகட்டம்)

இந்தியாவில் பிறக்கும் அப்பாவிக் குழந்தைகளை கடவுள்தான் காப்பாற்றவேண்டும்.

No comments: