தினமலர் நவம்பர் 22,2010
மகாவீரர், புத்தர் போன்ற மகான்களின் மிகச் சிறந்த போதனைகளால் சர்வதேச அளவில் இந்தியாவுக்கு புகழ் கிடைத்தது அந்த காலம். இதற்கு பின், மகாத்மா காந்தியின் அஹிம்சை போராட்டங்கள், இந்தியாவின் பெருமையை உலகுக்கு உணர்த்தின. ஆனால், தற்போது இந்திய அரசியல்வாதிகளின் ஊழல் வரலாறு தான், இந்தியாவை உலகுக்கு அடையாளப் படுத்தும் விஷயமாக மாறி விட்டது என்பது வேதனையான உண்மை. இந்தியாவில் நடந்த மிகப் பெரிய ஊழல்களில் சில:
மெகா ஸ்பெக்ட்ரம் ஊழல் 1.76 லட்சம் கோடியில் என்ன செய்யலாம்?
* 2010-11ம் ஆண்டு பட்ஜெட்டில் ராணுவத்துக்கு ஒதுக்கப்பட்ட தொகைக்கு, இந்த 1.76 லட்சம் கோடி ரூபாய் சமம்.* மத்திய அரசு தாக்கல் செய்யும் பட்ஜெட்டில் இந்த தொகை ஆறில் ஒரு பங்கு.
* பொதுத் துறை நிறுவனங்கள் மூலம் கிடைக்கும் லாபம் மற்றும் டிவிடென்ட் மூலம், அரசுக்கு 51 ஆயிரத்து 309 கோடி ரூபாய் கிடைக்கிறது. "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த ஊழல் தொகை, அதை விட மூன்று பங்கு அதிகம்.* பட்ஜெட்டில் சுகாதாரத் துறைக்காக 25 ஆயிரத்து 154 கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது. ஸ்பெக்ட்ரம் முறைகேட்டு தொகை இதை விட ஏழு மடங்கு அதிகம்.
* கல்விக்காக பட்ஜெட்டில் அரசு ஒதுக்கும் தொகையை விட, ஊழல் நடந்ததாக கூறப்படும் தொகை மூன்று மடங்கு அதிகம்.மற்ற ஊழல்கள்:
2. சர்க்கரை ஊழல் 650 கோடி
3. போபர்ஸ் ஊழல் 65 கோடி4. ஹவாலா ஊழல் 65 கோடி
5. எம்.பி., டிரேடிங் 32 கோடி6. உர ஊழல் 133 கோடி
7. மருத்துவ உபகரண ஊழல் 5,000 கோடி8. இந்தியன் வங்கி 1,336 கோடி
9. மாட்டுத் தீவன ஊழல் (பீகார்) 1,000 கோடி10. நில ஊழல் (பீகார்) 400 கோடி
11. வேட்டி - சேலை ஊழல் (தமிழகம்) 11 கோடி12. நிலக்கரி ஊழல் (தமிழகம்) 750 கோடி ஊழல் செய்யப்பட்ட இந்த தொகையை, நாட்டின் கட்டமைப்புக்கு வசதிக்கு பயன்படுத்தியிருந்தால், இந்தியா, வளர்ச்சி அடைந்த நாடுகளின் பட்டியலில் எப்போதோ இடம் பெற்றிருக்கும்.
மக்களை ஆள்பவர்கள் இப்படி கோடி கோடியாக ஊழல் செய்து ஆனந்தமாக வாழ்ந்து கொண்டிருக்கும்போது கடைக்கோடியில் வாழும் இந்தியக் குழந்தைகளின் நிலை எப்படி இருக்கிறது என்று பின்வரும் படத்தில் பாருங்கள்.
1 comment:
keduketta indhiya thalaivargal
Post a Comment